Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா?

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (12:40 IST)
கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்நிலையில் இப்போது அதே போன்ற மற்றொரு தொற்றான வெள்ளை பூஞ்சை தொற்று நான்கு பேருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றின் மூலம் நுரையீரல், நகங்கள், தோல், வாய் வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுக்களையும் பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தொற்றின் அறிகுறிகள் என்ன என தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
கொரோனா போன்ற அறிகுறிகள் தென்பட்டும் கொரோனா நெகட்டிவ் என வரும் நோயாளிகளுக்கு வெள்ளை பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. 
 
சிடி ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலமாகவே இந்நோயை கண்டறிய முடியும்.
 
நுரையீரலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை, கல்லீரல், தோல், நகம், மூளை, பிறப்பு உறுப்புகள், வயிறு மற்றும் வாயில் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்போரும், கொரோனா நோயாளிகளும், சர்க்கரை நோயாளிகளும், புற்றுநோய் பாதித்தவர்கள், அதிகப்படியான ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்பவர்களை இந்நோய் அதிகம் தாக்கும் ஆபத்து இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments