Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் விவகாரம்: நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை

Webdunia
திங்கள், 11 மே 2020 (19:07 IST)
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளிலும் சமூக விலகலை பின்பற்றவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்து தெரிய வந்ததுஇந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி  மாலை   சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடியாக  ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைனில் மட்டுமே மதுக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த உத்தரவால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடிய அரசியல் கட்சிகளுக்கும், சமூக நல ஆர்வலர்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இந்நிலையில், நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை எனவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில். இன்று சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் மனுவில் பிழை: உச்சநீதிமன்றம்' பிழையை சரி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டால் நாளையே விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக அரசு தாக்கல்  செய்துள்ள  மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை. அந்த மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், பி.ஆர்.  கவாய் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments