ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் கைப்பற்றிய நிலையில் நிறுவன குடியிருப்புகளில் உள்ள ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஏர் இந்தியாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பலர் நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு நோட்டீஸ் விடுத்துள்ள டாடா நிறுவனம் 6 மாத அவகாசத்திற்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் 15 லட்சம் அபராதத்துடன் இருமடங்கு வாடகை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கத்தினர் இதை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.