பீகார் மாநிலத்தில் பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை உடனடியாக புகைப்படம் எடுக்குமாறு ஆசியர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத் மற்றும் முஸாபர்புர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில அரசு வேதனை அளிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுவெளியில் மலம் கழிப்பவர்கள் பார்த்தால் உடனடியாக தங்கள் கைப்பேசியில் புகைப்படம் எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் காலை 5 மணி மற்றும் மாலை 4 மணிக்கு ஷிப்ட் அடிப்படையில் புகைப்படம் எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் புகைப்படம் எடுக்கும் பணியை மேற்பார்வையிட்ட பள்ளி முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநில அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுபோன்று புகைப்படம் எடுத்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் புகைப்படும் எடுத்தால் அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இது எங்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.