Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

லிஃப்ட் கொடுத்து பலாத்காரம், 600-க்கும் மேற்பட்ட பெண்கள், கிணற்றில் கிடக்கும் பிணங்கள்: தெலங்கானாவில் பகீர்

லிஃப்ட் கொடுத்து பலாத்காரம், 600-க்கும் மேற்பட்ட பெண்கள், கிணற்றில் கிடக்கும் பிணங்கள்: தெலங்கானாவில் பகீர்
, வியாழன், 2 மே 2019 (12:25 IST)
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்களின் சடலத்தை கிணற்றில் இருந்து எடுத்தது தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தெலங்கானா மாநிலம் ஹாஜிபூர் என்னும் கிராமத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் சிராவனி என்னும் இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி காணாமல் போனார். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
 
அப்போது சிராவனியின் பை சீனிவாச ரெட்டிக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே கிணற்றில் சிராவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. இதனால், சீனிவாச ரெட்டியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
webdunia
விசாரணையில் அவந்தான் அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தி கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டான். அதோடு, அண்டஹ் கிணற்றில் இருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது. அது அதே பகுதியை சேர்ந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன மணீஷா என்னும் மாணவியின் எலும்புக்கூடு என கண்டிபிடிக்கப்பட்டது.
 
இதன் பின்னர் போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அந்த பாழடைந்த கிணறு சீனிவாச ரெட்டிக்கு சொந்தமானது என்பதும்  அருகில் உள்ள ஊர்களில் இருந்து ஹாஜிப்பூருக்கு வந்து செல்லக்கூடிய மாணவிகளை பைக்கில் அழைத்து செல்வதாக கூறி ஏற்றி சென்று மாணவிகளை பலாத்காரம் செய்து, கொலை செய்தி கிணற்றில் வீடிவிடுவார் என்பதும் தெரியவந்துள்ளது. 
webdunia
மேலும், சீனிவாச ரெட்டி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கும் நிலையில், அவனது சமூக வலைத்தளபக்கத்தை ஆராய்ந்த போது அதில் 600-க்கும் மேற்பட்ட பெண் நண்பர்கள் மட்டுமே இருந்ததும் தெரியவந்துள்ளது. இது போன்று எத்தனை பெண்களை பலாத்காரம் செய்து கிணற்றில் வீசியுள்ளான் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
ஹாஜிப்பூர் கிராமத்தினர் கோபத்தில் சீனிவாச ரெட்டியின் வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும், அவனை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைத்தேர்தல் வேட்புமனு வாபஸ் – இன்றே கடைசி !