மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தரும்படி திமுக எம்பி கனிமொழியிடம் தெலங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததை அடுத்து ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கி கொண்ட தெலுங்கு தேச கட்சி வரும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தின் மீது பாஜக அரசை கவிழ்க்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தெலுங்கு தேச எம்பிக்கள் அனனத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திமுக எம்.பி. கனிமொழியை தெலங்கு தேசம் எம்.பி.க்கள் சி.எம். ரமேஷ், டிஜி வெங்கடேஷன், முரளிமோகன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பாராளுமன்றத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பு குறித்து கனிமொழி எம்பி அவர்கள் கூறியதாவது: ''தெலங்கு தேசம் எம்.பி.க்கள் எப்பௌ சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை திமுக ஆதரிக்கும் என்று கூறியுள்ளார்.