தெலுங்கானா மாநில பாஜகவின் முன்னாள் எம்பி விவேகானந்த் என்பவர் பாஜகவில் இருந்து விலகுவதாக தெலுங்கானா மாநில பாஜக கட்சியின் தலைவர் கிசான் ரெட்டி அவர்களுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்ப்பியுள்ளார்.
பாஜகவின் தெலுங்கானா மாநில பிரமுகரும், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான விவேகானந்த் பாஜகவில் இருந்த திடீரென விலகுவது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
மேலும் பாஜகவில் இருந்து விலகிய விவேகானந்த் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது என்றால் விவேகானந்த் முதல்வர் வேட்பாளர் என்றும் கூறப்படுகிறது.
அவர் காங்கிரசில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தெலுங்கானா அரசியல் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.