தெலங்கானா அரசு என்னை தொடர்ந்து அவமதிக்கிறது என அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவும், உரை நிகழ்த்தவும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்
கவர்னர் செல்லும் இடங்களில் அரசு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் பெண் ஆளுநர் ஒருவருக்கு எதிராக எப்படி பாகுபாடு காட்டப்பட்டது என்பது குறித்து வரலாற்றில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் கூறினார்
பிரதமர் மோடி வரும் போதே தெலுங்கானா அரசு அவரை வரவேற்பதில் இல்லை என்ற நிலையில் அவருக்கு எந்த அளவில் வரவேற்பு இருக்குமென்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்