கேரள மாநிலம் ஆலப்புழாவில் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் 12 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்டதாக தகவல்.
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (Social Democratic Party of India) கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான்; பாரதிய ஜனதா கட்சியின் ஒ.பி.சி பிரிவின் மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி முகிமை தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பேசிய ஆலப்புழாவின் எஸ்.பி, ஜி.ஜெய்தேவ்," இது குறித்து கூடுதல் விசாரணை தேவைப்படுகிறது. நேற்று இரவு ஒரு கொலை நடந்துள்ளது. மற்றொரு கொலை இன்று காலை 6:30 மணியளவில் நடந்தது. நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறோம்.
மேலும் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இரு கொலைகளுக்கும் இடையே ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்று விசாரித்து வருகிறோம் என கூறியதாக தெரிகிறது.