இந்திய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடர்ந்த வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காஷ்மீர் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு, ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்திய அரசின் இந்த செயல்பாட்டை கண்டித்து காஷ்மீரின் காலிஸ்தான் வாக்கெடுப்பு அமைப்பு, சில உப அமைப்புகளும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்தியாவின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு ரூ.750 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. ஆனால் இந்த வழக்கு மீதான கடந்த கால விசாரணைக்கு மனுதாரர்கள் யாரும் வராததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கடந்த அக்டோபர் மாதத்திலேயே பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி தற்போது இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக டெக்ஸாஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.