ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது செவிலியர்
குழந்தையை வேகமாக இழுத்ததால் பிஞ்சுக் குழந்தை பாதியாக வெளிவந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெல்சல்மார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திஷாகன்வார் என்ற கர்பிணிப்பெண் பிரசவத்திற்காக ஜனவரி 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது பிரசவத்தின் போது ஆண் செவிலியர் ஒருவர் தான் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.
அப்பொழுது குழ்ந்தை வெளியே வரும் வேளையில் வேகமாக அவர் இழுத்ததால் பிஞ்சு குழ்ந்தையின் உடல் பகுதி பாதிபாதியாக வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்து பதறிய செவிலியர் குழந்தை பிறப்பதிலேயே குறை உள்ளது என்றும் கர்பிணியின் கணவரிடம் கூறியுள்ளார்.
இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதும் கர்ப்பிணியைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் தலைப்பகுதி மற்றும் அவரது வயிற்றுக்குள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆண் செவிலியர்கள் அம்ரிட்லால், ஜூன்சார் சிங் ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்தனர். ஆனால் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது. இப்பிரச்சனை மேலும் பூதாகராகி வருவதால் கூடிய விரைவில் ஆண் செவிலியர்கள் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.