தைவான் விவகாரத்தில் அமெரிக்கா -சீனா இடையே 3 வது உலகப்போர் மூளும் அபாயம்?
, புதன், 3 ஆகஸ்ட் 2022 (14:48 IST)
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் அரசாங்கப்படைகளுக்கும், மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த சண்டையின்போது, சீனா- தைவான் பிரிந்தது.
இந்தச் சண்டையின்போது, கம்யூனிஸ்டுகள் 1949 ஆம் ஆண்டில் வெற்றிபெற்றனர். அதன்பின் மாவோ சேதுங் சீனாவின் தலை நகர் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.
இந்தச் சண்டைக்கிடையே கோமின்டாங் என்ற தேசியவாத கட்சி தைவானுக்குட் தப்பிச் சென்று, அங்கு குறிப்பிட்ட காலம் ஆசி செய்துவந்ததால் பிரபலமான கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனவே தைவானை கத்தோலிக்க கிறிஸ்த தலைமையகமான வாட்டிகன் உள்ளிட்ட 13 நாடுகள் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்துள்ள போதிலும் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனென்றால் சீனாவில் இருந்து பிரிந்த தைவான் நிச்சயம் ஒரு நாள் இணையும் என எதிர்க்கப்பார்க்கப்படுவதான் காரணம்.
இந்த நிலையில் 1949க்குப் பின்னர் தைவான் தனி நாடாக உருவான போதிலும், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் அரசு முழங்கிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், தைவான் எல்லைக்குள் அடிக்கடி சீனா தன் விமானங்களை ஊடுருவி வருவது அங்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க நாடாளுமன்ற சபா நாயகர் நான்சி பெலோசி சீனாவில் எச்சரிக்கையை மீறி தற்போது தைவான் சென்றுள்ளது அமெரிக்கா – சீனா இடையே புகைச்சலை உண்டாகியுள்ளது.
இந்த நிலையில்,தைவானின் தைவானின் ஜன நாயகத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை மதிப்பதாக பேசியுள்ள நான்சி இன்று தைவான் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
இதற்கிடையில் தைவானின் பல பொருட்களுக்குச் சீனா தடைவிதித்துள்ளது. எனவே நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா கடுமையான ஏன் எச்சரிக்கை விடுத்துள்ளது என்றால், அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைக்கு உகந்த நட்பு நாடுகளின் பட்டியலில் உள்ளதும். கடந்த 4 ஆண்டுகளாக, தைவானுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு சீராக இல்லாததுதான்.
இதனால், தைவான் சீனா இடையே போர் எழுந்தால், சீனாவைவிட பலசாலியான அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனுக்கு உதவுவதுபோல், தைவானுக்கும் உதவும் என தெரிகிறது. இது 3 ஆம் உலகப் போருக்கும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்