கேரள உயர்நீதிமன்றம் நீதிபதி, குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கணவன் - மனைவியின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் கணவன் மனைவி தரப்பிற்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனைவி தரப்பினர் குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று பெயரிட வேண்டும் என்றனர். கணவன் தரப்பு ‘அபிநவ் சச்சின்’ என்று பெயரிட வேண்டும் என்றனர்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்று பெயர் சூட்டினார். இரு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் வகையில், மனைவி கூறியதில் ஜோகன் என்ற பெயரையும், கணவன் கூறியதில் சச்சின் என்ற பெயரையும் எடுத்துக்கொண்டு பெயர் வைத்ததாக நீதிபதி தெரிவித்தார். நீதிபதியின் இந்த முடிவிற்கு பல தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.