தி கேரளா ஸ்டோரி படக்குழுவினர் இன்று லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
பாலிவுட்டில் தயாரான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த மே 5 மாதம் ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அமைப்புகளால் எதிர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிடவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து,தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணை வரும் 12 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அறிவிக்கவுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறினார்.
இதையடுத்து, தி கேரளா ஸ்டோரி படக்குழுவினர் இன்று லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.