நேற்று முன்தினம் (பிப்ரவரி 1 ) ஆம் தேதி மத்தியில் ஆளும் பாஜக அரசால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாகவும் ,எதிராகவும், விமர்சனங்கள் மாறி மாறி வந்த வண்ணம் இருக்கின்றன.வரும் தேர்தலுக்கு காங்கிரஸ் போன்ற கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பாகஜவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளது:
நாடளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் நான்கு மாதங்களே உள்ளது. தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும்.முக்கியமாக ஒடிஷா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற வேண்டும்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றே ஆக வேண்டும்.குறிப்பாக தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால்தான் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிக் கொடி நாட்ட முடியும் அதற்காக கட்சி உறுப்பினர்கள் உழைக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.