Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மாடு கொல்லப்பட்ட விவகாரம் : பட்டப்பகலில் போலீஸ் அதிகாரி கொலை ! வன்முறை தாண்டவம்

மாடு கொல்லப்பட்ட விவகாரம்  : பட்டப்பகலில் போலீஸ் அதிகாரி கொலை ! வன்முறை தாண்டவம்
, செவ்வாய், 4 டிசம்பர் 2018 (16:29 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்தசாகர் பகுதியில் கலவரக்காரர்கள் தாக்குதலில் போலீஸ் அதிகாரி  பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்தசாகர் மாவட்டத்தில் பசு மற்றும் அதன் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் இருந்துள்ளன. மக்கள் இதனைக்கண்டு  கவலை அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமாக உள்ளவர்களை கைது செய்யவேண்டும் என பேராடி வந்துள்ளனர்.
 
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இந்நிநிலையில் போராட்டக் காரர்களில் உட்புந்த சில சமூக விரோதிகள் போலீஸார் மீது கல்வீசி  தாக்குதல் நடத்தினர் . இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். இதனையடுத்து போராட்டகாரர்கள் காவல் நிலையத்துக்கும் , போலிஸ் வாகனத்துக்கும் தீ வைத்தனர்.
 
இதனால் போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் வன்முறையாளர்கள் தொடர்ந்து  கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
 
அப்போது போலிசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு இளைஞர் பலியானார். போராட்டம் எப்படி கலவரமாக மாறியது என்பது பற்றியும் இந்தக் கலவரத்துக்கு காரணமானவர்களையும் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
 
இந்தக் கலவரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரியன் மறையும், தாமரை மலரும்: தமிழிசை சபதம்!