இந்தியாவில் உலகிலுள்ள முன்னணி நிறுவனங்களின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் கிளை நிறுவனங்களை அமைத்து வருகின்றன.
இந்நிலையில் பெங்களூரில் உலகில் மிகப்பெரிய – இ ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைக்கவுள்ளது.
இதற்கான இடத்தை இன்று ஓலா நிறுவனர் பவிஸ் அகர்வால் பார்வையிட்டுள்ளார்.
அடுத்த 12 மாதத்தில் பெங்களூரில் சுமார் 500 ஏக்கர் பரப்பரளவு கொண்ட இந்த இடத்தில் உலகிலேயே மிகப்பெரிய -இ ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்க அவர் திட்டமிட்டிருக்கிறார்.
தற்போது இ மின்வாகனங்களுக்கு தேவை அதிகரித்துவரும் நிலையில், இங்கு ஆண்டிற்கு சுமார் 10 மில்லியன் வாகனங்களை தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.