Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அடுத்த ஓராண்டுகளுக்கு அரசின் புதிய திட்டங்கள் கிடையாது - மத்திய நிதியமைச்சகம்

அடுத்த  ஓராண்டுகளுக்கு அரசின் புதிய திட்டங்கள் கிடையாது - மத்திய நிதியமைச்சகம்
, வெள்ளி, 5 ஜூன் 2020 (20:48 IST)
அடுத்த  ஓராண்டுகளுக்கு அரசின் புதிய திட்டங்கள் கிடையாது என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லடச்த்தைக் கடந்துள்ளது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். இந்த நோய்த் தொற்றைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்களும் இந்நோய்த் தொற்றைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அறிவுறித்தி வருகிறது.

தற்போது 4 வது கட்ட ஊரடங்கு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது வருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம்  கோடிக்கான பொருளாதார திட்டங்கள் குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு விளக்கினார்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிடுள்ளது;

கொரொனாவால் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிசெய்ய இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டி ரூ.20.97 கோடி நிதி சீர்திருத்த திட்டத்தை அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியிடமுள்ள சுமார் 8.01 லட்சம் கோடி நிதியையும் உள்ளடக்கியே இந்த அறிவிப்பு வெளியிட்டது.  எனவே, இனிஓராண்டுக்கு எந்தவித புது அறிவிப்புகளும் அரசாங்கத் திட்டங்களும் அரசால் வெளியிடப்பாடது என தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்துக்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு