Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனவில் வந்து கூறிய கடவுள்.. திருடிய சிலையை கொண்டு வந்து கொடுத்த திருடன்..!

Siva
வியாழன், 3 அக்டோபர் 2024 (15:59 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சாமி சிலையை திருடிய திருடன் மறுநாளே அதை கொண்டு வந்து கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற மாவட்டத்தில் புகழ்பெற்ற ஒரு ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் நூறு ஆண்டுகள் பழமையான ராதை - கிருஷ்ணன் சிலை நிறுவப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் அந்த சிலை திருடப்பட்டது. இதனால், அந்த கோவில் நிர்வாகி சாப்பிடாமல் கவலையில் இருந்ததாகவும், அந்த ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் சோகமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சிலையை திருடிய திருடன் மறுநாள் அந்த சிலையை ஒப்படைத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், "நான் பாவம் செய்து விட்டேன், தெரியாமல் ராதை - கிருஷ்ணன் சிலையை திருடினேன். திருடிய நாளில் இருந்து என் கனவில் கடவுள் வந்து, நான் செய்தது தவறு என்று கூறினார்.

எனக்கு சாப்பிடவும், தூங்கவும் முடியவில்லை. என் மகனும் மனைவியும் நோய்வாய்ப்பட்டனர். எனவே, நான் சிலையை திருடியதற்கு மன்னிப்பு கேட்டு, சிலையை விட்டு செல்கிறேன். என்னை மன்னித்து, சிலையை மீண்டும் கோவிலில் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சிலை கோவில் நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், மீண்டும் சிலைக்கு பூஜைகள் செய்து பிரதிர்ஷ்டை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments