சண்டிகரில் விவாகரத்துக்கு பிறகான ஜீவனாம்சம் குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
சமீப காலங்களில் தம்பதிகள் இடையே விவகாரத்து சம்பவங்கள் அதிகம் செய்தியாகி வருகிறது. விவாகரத்தின்போது கணவன்மார்கள் மனைவிக்கு, குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியது சட்டமாக உள்ளது. இந்நிலையில்தான் ஜீவனாம்சம் கொடுப்பதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார் விவாகரத்தான கணவர் ஒருவர்.
சண்டிகரை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இந்த வழக்கில் மனைவிக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஜீவனாம்சமாக தர வேண்டும் என கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அந்த கணவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதில் அவர் தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதை சுட்டிக்காட்டி ஜீவனாம்சம் வழங்க முடியாது என வாதிட்டுள்ளார், அவரது வாதத்தை ஏற்ற நீதிமன்றம், திருமணத்தை மீறிய கள்ள உறவில் இருக்கும் மனைவி கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது என்று கோரி கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Edit by Prasanth.K