நாகலாந்து, திரிபுரா, மற்றும் மேகாலாயா ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளிலும், என்பிஎஃப் 32 தொகுகளிலும் மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை
அதேபோல் 59 தொகுதிகள் அடங்கிய திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 30 தொகுதிகளிலும் பாஜக 28 தொகுதிகளிலும் மற்றவை 1 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் என்பிபி 15 தொகுதிகளிலும், மற்றவை 20 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை
மொத்தத்தில் மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியும், நாகலாந்தில் என்பிஎஃப் கட்சியும் ஆட்சியை பிடிக்கும் என்றும் திரிபுராவில் மட்டும் இழுபறி நிலை உள்ளது என்பதே இப்போதைய முடிவுகள் விபரங்கள் ஆகும்