டிக்டாக் செயலியில் ஆபாசமாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் பதியப் பட்டிருந்த 60 லட்சம் வீடியோக்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கி வைத்திருக்கிறது டிக் டாக் எனும் செயலி. சாமான்ய மக்களின் சாதாரண ஆசைகளை வெளிப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட இதுபோன்ற செயலிகளில் காலப்போக்கில் வன்முறை தூண்டும் பேச்சுகளும் ஆபாசமான வீடியோக்களும் வெளியாக ஆரம்பித்துவிட்டன.
இதனை எதிர்த்து பலரும் கண்டனங்கள் தெரிவிக்க இது போன்ற செயலிகள் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுட்டு வருவதாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான ஸ்வதேஷி ஜக்ரண் மஞ்ச், பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளித்துள்ளனர் இதையடுத்து மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து டிக் டாக் செயலியில் இருந்த 60 லட்சம் ஆபாச வீடியோக்களை டிக்டாக் நீக்கியுள்ளது.