திருமலை திருப்பதி தேவஸ்தனம் (TTD) என்பது உலகின் பணக்கார இந்து அறநிலைய அமைப்பாகும்.
திருமலை திருப்பதி தேவஸ்தனம் ஆந்திராவில் திருமலை திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றிருக்கும் அறநிலைய அமைப்பு. இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உள்ள தனது சொத்துக்களின் மொத்த மதிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தனம் வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தனத்தின் கூற்றுப்படி, இந்தியா முழுவதும் 85,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 960 சொத்துக்கள் கோயில் அறக்கட்டளைக்கு உள்ளது. அவை 7,123 ஏக்கர் பரப்பளவில் 85,705 கோடி ரூபாய் மதிப்பில் பரவியுள்ளன. மேலும், 14,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலையான வைப்பு மற்றும் 14 டன் தங்க இருப்பு உள்ளது.
ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோவின் உண்மையான மதிப்பு, நியாயமான சந்தை விலையில் ஆந்திராவில் ஆளும் அதிகாரப்பூர்வ அரசாங்க மதிப்பை விட குறைந்தது 1.5 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் உண்டியலில் நன்கொடைகள் படிப்படியாக அதிகரித்து 700 கோடி ரூபாய்க்கு உள்ளது.
ஆந்திர மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தனத்தின் சொத்துக்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 2020 ஆம் ஆண்டில், திருமலை திருப்பதி தேவஸ்தனத்தின் முதல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 8,088.89 ஏக்கர் பரப்பளவில் 1,128 அசையா சொத்துக்கள் இருப்பதாக தேவஸ்தனம் வெளிப்படுத்தியது. இந்த 141 சொத்துக்களில், மொத்தம் 335.21 ஏக்கர் 1971 முதல் 2014 வரை பல்வேறு காரணங்களுக்காக ஏலம் விடப்பட்டது.
இருப்பினும் கோயில் அறக்கட்டளைக்கு எதிர்காலத்தில் சொத்துக்களை விற்க எந்த திட்டமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.