Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

Siva
ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (16:59 IST)
கர்நாடகா பால் கூட்டமைப்பிலிருந்து புதிய நெய் கொள்முதல் செய்ய இருப்பதாகவும், அந்த நிறுவனத்துடன் இணைந்து தினமும் 8 முதல் 9 லட்சம் லட்டுகள் தயாரித்து பக்தர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் செய்தியாளர்களிடம் பேசிய போது, லட்டுகளின் தரம் மேம்படுத்தப்படும் என்றும், லட்டுகளின் தரத்தில் இனி எந்த சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றும் கூறினார்.
மேலும், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நந்தினி நிறுவனத்தின் நெய் பயன்படுத்தப்படும் என்றும், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரம்மோற்சவத்தின் போது தினமும் 8 முதல் 9 லட்சம் லட்டுகள் வரை தயாரித்து வழங்கத் தயாராக உள்ளதாகவும், 24 மணி நேரமும் லட்டு தயாரிக்க தேவையான நெய் உள்பட அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்."

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments