திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்போற்சவம் வரும் மார்ச் 3ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோயில் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் தெப்போற்சவம் நடப்பது வழக்கம்!
இந்த நிலையில், இந்த ஆண்டு தெப்போற்சவம் வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை5 நாட்கள் நடக்கவுள்ளது.
தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உஅய நய நாச்சியாளர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வழியாக வலம் வந்து புஷ்கரணியில் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.