பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லிக்கு சென்றிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களூம் நேற்று டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர்களும் சென்றனர்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரும் அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தார். விரைவில் அறிக்கையில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பிரதமர் முதல்வரிடம் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது
இந்த நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. அவரிடமும் தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகள் குறித்து முதல்வர் பேசியதாகவும், நிர்மலா சீதாரமான், முதல்வருக்கு நம்பிக்கை தரும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது