Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

1,421 ஆக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

1,421 ஆக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
, ஞாயிறு, 27 மார்ச் 2022 (09:32 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,19,453 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 149 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,21,004 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,82,262 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 16,187 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவ்வளவு உயர்ந்தாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் மறந்து விடாதீர்கள்! – மு.க.ஸ்டாலின்!