சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதனை அடுத்து பக்தர்கள் கண்டிப்பாக ஆன்லைன் மூலம் பதிவு செய்த பின்னரே கோவிலுக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கார்த்திகை மாதம் விரதம் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற காரணத்தை அடுத்து சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதற்கான இணைய தளம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பம்பை வரை நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது