தெலுங்கானா மாநிலத்தில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து பொதுமக்கள் தக்காளியை அள்ளிச் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தக்காளி விலை கடந்த சில நாட்களாக கடுமையாக விலை உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தக்காளி கடைக்காரர் பவுன்சரை பாதுகாப்புக்கு வைப்பதும் தக்காளி வியாபாரத்தில் அதிக லாபம் கொண்ட விவசாயி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்வது உட்பட பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகிய நிலையில் பொதுமக்கள் தக்காளியை அள்ளி செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்.
விபத்துக்குள்ளான லாரியில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள தக்காளி இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து டெல்லி சென்ற லாரி தெலுங்கானா மாநிலத்தில் கவிழ்ந்து அதிலிருந்து தக்காளியில் சிதறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது