நாளை சித்ரா பௌர்ணமி தினத்தில் 2023 ஆம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் நிகழ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை சித்ரா பௌர்ணமி தினத்தில் இரவு 8:45 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 10 52 மணிக்கு சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும் என்றும் மே 6ஆம் தேதி அதிகாலை 01.01 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைகிறது என்றும் இந்த சந்திர கிரகணம் 4 மணி நேரம் 18 நிமிடங்கள் நிகழும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ளவர்கள் இந்த சந்திர கிரகணத்தை இரவு 10:52 மணி முதல் பார்க்க முடியும் என்றும் சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு உபகாரங்கள் எதுவும் தேவையில்லை என்றும் நாசா அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் சந்திர கிரகணம் முழுமையாக தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்