மஹாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் ஃபட்நாவிஸ் ஆட்சியமைத்ததை எதிர்த்து ஆளுநர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 5 மனிக்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று மாலையே இடைக்கால சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.