தெலுங்கானாவில் சிவன் கோவில் ஒன்றில் நுழைந்த ஆமையை கொண்டு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை நடத்திய விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தெலுங்கானாவில் சில்கூர் பெருமாள் ஆலயத்தின் உள்ளே உள்ள சிவன் சன்னதியில் ஆமை ஒன்று புகுந்துள்ளது. இதை கண்ட அர்ச்சகர்கள் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதாரமாக அதை பாவித்து, அதற்கு நாமமிட்டு சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். மேலும் சிவன் சன்னத்திக்குள் மகாவிஷ்ணுவின் அவதாரம் நுழைந்திருப்பது கொரோனா விரைவில் அழியும் என்பதற்கான அறிகுறி என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவிலில் ஆமையை வைத்து நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளன.