உங்கள் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை எளிதாக அறிய இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வழிவகை செய்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு சேவைகள் பெற, மொபைல் எண், வங்கி கணக்கு, பான் எண் ஆகியவற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நமது தகவல்கள் திருடப்பட்டு அதை முறைகேடாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இதனால் பொதுமக்கள் ஆதார் எண் குறிப்பிட வேண்டுமென்றாலே அச்சமடைக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய இனையதளத்தில் வசதி அளித்துள்ளது.
ஒருவரது ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய அவர் ஆதார் இணையதளம் மூலம் எளிதாக அறிந்துக்கொள்ளலாம். எப்போ, எங்கு உங்கள் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் எளிதாக பெறலாம்.
உங்கள் ஆதார் எண் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பார்க்கவும்