இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே துறை இது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும், விபத்தைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்றும் ஒரு ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கலாம்னா ரயில் நிலையம் அருகே ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த சம்பவத்தில் உயிரிழப்பும் காயமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பயணிகள் தங்களது சொந்த இடத்துக்கு செல்ல அனைத்து முயற்சிகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதே ரயில் நிலையத்தில் அக்டோபர் 9ஆம் தேதி உள்ளூர் ரயில் ஒன்று தடம் புரண்ட நிலையில், இன்று எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.