Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 25 May 2025
webdunia

மார்ச் 22 ஆம் தேதி ஞாயிறன்று ரயில்கள் ஓடாது ...பிடிஐ அறிவிப்பு !!

Advertiesment
கொரோனா வைரஸ்
, வெள்ளி, 20 மார்ச் 2020 (19:49 IST)
மார்ச் 22 ஆம் தேதி ஞாயிறன்று ரயில்கள் ஓடாது ...பிடிஐ அறிவிப்பு !!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223  ஆக உயர்ந்துள்ளது.
 
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில்,கொரோனாவால் இன்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
 
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் வரும் 22 ஆம்தேதி வீட்டிலேயே இருக்கும் படி, சுய ஊரடங்கு உத்தரவை  பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
 
இந்த நிலையில் வரும் ஞாயிறு மார்ச் 22 ஆம் தேதி அன்று, நாளை நாள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில்கள் ஓடாது என பிடிஐ தெரிவித்துள்ளது.
 
மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறு அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என பிடிஐ தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 22 ல் - 5 லட்சம் லாரிகள் ஓடாது - லாரி உரிமையாளர்கள் சம்மேளம் தகவல் !!