Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

2024 தேர்தலுக்கு இஸ்ரோவை கருவியாக பயன்படுத்தும் பாஜக: திரிணாமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

2024 தேர்தலுக்கு இஸ்ரோவை கருவியாக பயன்படுத்தும் பாஜக:  திரிணாமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு..!
, ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (11:27 IST)
2024 தேர்தலுக்கு இஸ்ரோவின் வெற்றியை பாஜக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக திருவண்ணாமலை காங்கிரஸ் கட்சியின் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். 
 
சமீபத்தில் நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்தராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக  நிலவில் தரையிறங்கியது என்பதும் இதனை நேரில் பார்த்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அது மட்டும் இன்றி சந்திராயன் 2 தரையிறங்க இடத்தை திரயங்கா என்றும் சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கிய இடத்தை சிவசக்தி என்ற பிரதமர் மோடி பெயரிட்டார். அதுமட்டும் சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய  விண்வெளி தினமாக கடைபிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி இது குறித்து கூறிய போது சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியதை பாஜக 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான கருவியாக மாற்றி கொண்டிருக்கிறது என்றும் பாஜகவின் ஐடி விங் சந்திராயன் 3 தரையிறங்கியதற்கு எந்த பணியும் செய்யவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம், இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்..!