Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

டிரம்ப்பிற்காக இந்தியா வந்துள்ள ஷ்பெஷல் ஹெலிகாப்டர்..

டிரம்ப்பிற்காக இந்தியா வந்துள்ள ஷ்பெஷல் ஹெலிகாப்டர்..

Arun Prasath

, சனி, 22 பிப்ரவரி 2020 (17:28 IST)
இந்தியாவிற்கு அதிபர் டிரம்ப் வரவிறுக்கும் நிலையில், பயணத்தின் போது பயன்படுத்துவதற்கான பிரத்யேக மரைன் ஒன் ஹெலிகாப்டர், அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

வருகிற 24 ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா வரவிருக்கும் நிலையில், பயன்படுத்துவதற்கான பிரத்யேக மரைன் ஒன் ஹெலிகாப்டர், அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பயணிக்கும் ஹெலிகாப்டர்கள் மரைன் ஒன் என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும். இவற்றில் 19 ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. இதில் 3D SEA KING helicopter 11 and VH-60N WHITE HAWKS ரக ஹெலிகாப்டர்கள் வெளிநாட்டுப் பயணங்களின் போது 5 ஹெலிகாப்டர்கள் சரக்கு விமானங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

73 அடி நீளமும், 17 அடி உயரமும் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் 241 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறனுடன், 14 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 200 சதுர அடிக்கான அறையும், கழிப்பறையும், இடம்பிடித்துள்ளன. மேலும் வெளிப்புற ஒலியை குறைத்து ஹெலிகாப்டரின் கேபின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஏவுகணைகளை வீசும் வசதி, ஏவுகணைகளை மறித்து தாக்குவது, ரேடார்கள், எச்சரிக்கை கருவி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வகை ஹெலிகாப்டர்களில் 3 இன்ஜின்கள் இருக்கின்றன. இதில் ஒன்று பழுதடைந்தாலும், எவ்வித பிரச்சனையும் இன்றி பறக்கமுடியும்.

மேலும் HMX-1 SQUADRON அணியை சேர்ந்த நைட்வாக்ஸ் என அழைக்கப்படும் 4 விமானிகள் மட்டுமே, இந்த ஹெலிகாப்டர் இயக்க தகுதியானவர்களாகும். இந்த ஹெலிகாப்டரில் பயணிக்கும் அதிபர், உலகின் எந்த நாட்டில் தரையிறங்கினாலும், அங்கு அவரை வரவேற்கவும் மரியாதை செய்யவும் மரைன் வீரர் ஒருவர் தயார் நிலையில் இருப்பது கடைப்பிடிக்கப்படும் மரபாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருந்தாலும் அரசியலை விட்டு விலகத் தயார்; ஸ்டாலினுக்கு சவால் விடும் பாஜக தலைவர்