உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் ஏற்படுத்திய கடும் சர்ச்சைக்கு போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் வசித்து வந்த பன்வாரிலால் என்பவர் சாதிக், அஸ்லாம் ஆகியோரிடம் வாங்கிய ரூ.10,000 கடனை திருப்பி செலுத்தாததால், பன்வாரிலாலின் 3 வயது மகள் டிவிங்கிள் கடத்தில் கொல்லாப்பட்டார்.
கடந்த 5 ஆம் தேதி சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது கண்டனங்களை முன்வைத்தனர். அதோடு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கண்களை தோண்டி எடுத்து, உடலில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் ஊடங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் அலிகார் போலீஸார் இது குறித்து கூறியதாவது, குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் குழந்தை எவ்வித பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகவில்லை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், உடலில் ஆசிட் ஊற்றி இருந்ததாகவும், இரண்டு கண்களும் தோண்டப்பட்டது எனவும் தகவல் பரவி வருகிறது. இவை அனைத்தும் முற்றிலும் தவறான தகவல்கள்.
சிறுமி, இறுதியாக மூச்சு திணறல் ஏற்பட்டதால்தான் உயிரிழந்தாள். இதனை தவிர மற்ற அனைத்தும் போலியான தகவல்களே என தெளிவுபடுத்தியுள்ளனர்.