பெங்களூருவில், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த என் பி (Enn Bii) என்ற பெண், ஊபர் ஆட்டோ ஓட்டுநரால் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும், அவர் சம்மதம் இல்லாமல் போட்டோ, வீடியோ எடுக்கப்பட்டதாகவும் கூறி, அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஆப்-பில் வராமல் தாமதமானதால், அந்த பெண் சவாரியை ரத்து செய்துவிட்டு வேறு ஆட்டோவில் சென்றார். அப்போது, அந்த ஊபர் ஓட்டுநர் அவர்களை தடுத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
சண்டையின்போது, ஓட்டுநர், தனக்கு தெரியாத கன்னடத்தில் பேச வற்புறுத்தியதாகவும், இந்தியில் பேசியபோது கோபமடைந்து திட்டத் தொடங்கியதாகவும் என் பி தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஓட்டுநர் தன்னை வீடியோ பதிவு செய்ததோடு, புகைப்படங்களையும் எடுத்துள்ளதாகவும், அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று தான் அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ பரவியதை தொடர்ந்து, பெங்களூரு நகரக் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஊபர் நிறுவனம் மன்னிப்பு கோரி, இது குறித்து தனிக்குழு மூலம் ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது.