உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவும் இதில் பெரும்பாலும் குழந்தைகள் என்றும் வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற மூன்றாவது அலையா? அல்லது இந்த காய்ச்சலுக்கு வேறு காரணமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்
உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனை அடுத்து மத்திய அரசு அவசரமாக சுகாதார நிபுணர் குழு ஒன்றை உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு மர்ம காய்ச்சல் குறித்து ஆய்வு செய்து அதற்கான சிகிச்சையை கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது