இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த UPI பண பரிவர்த்தனை ஏற்கனவே சிங்கப்பூர் மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கையிலும் UPI பரிவர்த்தனை தொடங்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் டெல்லி வந்திருக்கும் நிலையில் அவருடன் பிரதமர் மோடி சந்தித்து 4 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று UPI பரிவர்த்தனை ஆகும். இலங்கையில் UPI பரிவர்த்தனையை அனுமதிக்க அந்நாட்டு அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.
மேலும் நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் தற்போது நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது