அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக, இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க செனட்டர் அதிபர் டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இறக்குமதிகள் மீது 50% வரி விதித்த டிரம்ப்பின் முடிவுக்கு அமெரிக்காவின் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அமெரிக்க செனட்டர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இந்த பிடிவாதமான வரி விதிப்பு, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கவனமாக உருவாக்கப்பட்ட வலுவான உறவைப் பாதிக்கும் அபாயம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா - அமெரிக்கா இடையே ஆழமான பொருளாதார உறவுகள் இருப்பதாகவும், இரு தரப்புக்கும் மரியாதை அளிக்கும் வகையில் இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.