உத்தர பிரதேசத்தில் பெண் தலையில் எச்சில் துப்பி அலங்காரம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல அழகு கலை நிபுணரான ஜாவேத் ஹபீப் என்பவர் பல மாநிலங்களில் அழகுகலை பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறார். அவ்வாறாக சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் முசாபர் நகரில் பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்க வந்த ஒரு பெண்ணை மேடைக்கு அழைத்து அவருக்கு அலங்காரம் செய்து காட்டியுள்ளார். அப்போது பெண்ணின் தலையில் எச்சில் துப்பி அவர் அலங்காரம் செய்ததாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஜாவேத் ஹபீப் தன்னை அவமானப்படுத்தும் விதமாக நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க உத்தர பிரதேச காவல்துறை தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.