உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்டின் நந்தாதேவி மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் அலகந்தா மற்றும் தவுலிகங்கா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுபுற கிராமங்களை சூறையாடியது.
இந்த பயங்கர வெள்ளத்தால் தபோவன் குகைப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் வெள்ளத்தால் ஏற்பட்ட சகதியில் சிக்கி மாண்டனர். இந்நிலையில் இந்த துர் சம்பவம் நடந்து சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தபோவன் குகைப்பாதையில் சிக்கியவர்களில் 61 பேர் சகதியில் சிக்கிய நிலையிலும், 28 பேர் உடல் பாகங்கள் சிதறிய நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.