Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து குவிப்பு வழக்கு.! வளர்மதியின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

Senthil Velan
செவ்வாய், 30 ஜனவரி 2024 (15:46 IST)
முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மேல்முறையீடு செய்திருந்தார். 
 
முடித்து வைக்கப்பட்ட வழக்கை 10 ஆண்டுகளுக்கு பின் தாமாக முன்வந்து விசாரிப்பது ஏற்புடையதல்ல என வளர்மதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று வளர்மதி தரப்பில் வாதிடப்பட்டது
 
இதேபோன்ற வேறொரு வழக்கில் ஐகோர்ட் உத்தரவை அறிக்கையாக அளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ: 25 இடங்களில் போட்டியிட திமுக திட்டம்..! அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்..!! உடைகிறதா கூட்டணி?..
 
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை பிப்ரவரி ஆறாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்துவேன்: டிரம்பின் வீடியோ வைரல்...!

நடிகை கஸ்தூரி மீது மேலும் 2 வழக்குகள்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

தென் மாவட்டத்தில் போட்டி.. கட்சியில் பிக்பாஸ் பிரபலங்கள்.. சீமானின் மெகா திட்டம்..!

திருச்சி சூர்யாவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: நீதிமன்றத்தில் அரசுதரப்பு பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments