மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டதில் வெற்றிகரமாக சோதனை முடிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவீன அம்சங்களுடன் தயாராகி வரும் நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தது.
இந்த நிலையில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக முடிந்ததாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
முதலில் 120 கிமீ வேகத்தில் தொடங்கி பின்னர் படிப்படியாக 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் இயங்கியது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த ரயில் சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டால் 3 மணி நேரத்தில் பயணம் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது