Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்...

Webdunia
ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (11:05 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நாட்டில் மிகமூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி (95).  மூப்பின் காரணமாக இன்று தனது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
கடந்த 1923 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் பாகிஸ்தான் பகுதியில் உள்ள சிந்து மாகாணத்தில் பிறந்தவர் ராம்ஜெத் மலானி. இவர் சட்டம் பயின்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள உயர்  நீதிமன்றங்களில் தன் சட்ட பணியை துவக்கினார்.
 
அதன்பின்னர், முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு, மற்றும் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2 ஜி அலைக்கற்றை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். இவர் ஒரு வழக்கில் வாதாட ஒப்புக்கொண்டாலே, அது வெற்றிதான் என்ற ரீதியில் ராம்ஜெத் மலானியின் வாதத்திறமையை பற்றி நாடு அறிந்தது. மட்டுமல்லாமல் அவர் இந்தியாவிலேயே அதிகம் ஊதியம்பெரும் வழக்கறிஞர்களில் ஒருவராகவும் அறியப்பட்டார். 
 
பாஜக கட்சியில் இணைந்திருந்த அவர் அக்கட்சியின் சார்பில் இருமுறை லோக்சபா உறுப்பினராக இருந்தவர், மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பெருமைவகித்தவர்.
 
இன்று, ராம்ஜெத் மலானி,தனது 95 வயதில், வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு நாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
குடியரசுத் தலைவர்  விடுத்துள்ள இரங்கள் செய்தியில், ’புத்தி சாதுர்யமிக்க புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரை நாடு இழந்துவிட்டது ’என தெரிவித்துள்ளார்.
 
பிரதம் மோடி ராம்ஜெத் மலானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கள் செய்தியில், ’அவசரநிலை காலத்தில் பொது சுதந்திரத்திற்கான அவரது துணிச்சல் போராட்டம் நினைவில் கொள்ளப்படும் ’என  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments