Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பாஜகவில் இருந்து விலகினார் விஜயசாந்தி.. காங்கிரசில் இணைய திட்டமா?

vijayashanthi
, வியாழன், 16 நவம்பர் 2023 (07:48 IST)
நடிகை விஜயசாந்தி கடந்த சில மாதங்களாக பாஜகவில் இருந்த நிலையில் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நாளை அவர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை விஜயசாந்தி  கடந்த 1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதனை அடுத்து அவர் 2005 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விளங்கி தனிக்கட்சி தொடங்கினார். அதன் பின்னர் அவர் சந்திரசேகர் ராவ் அவர்களின்  டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.

2009 ஆம் ஆண்டு  தேர்தலில் வெற்றி பெற்று எம் பி ஆன நிலையில் 2014 ஆம் ஆண்டு திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற அவர் தற்போது மீண்டும் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார்.  

ஒரு சில வருடங்களுக்கு ஒரு முறை கட்சி மாறுவதை விஜய்சாந்தி வழக்கமாக கொண்டுள்ளார் என்று அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்? அமைச்சர் பதவி தூக்கப்படுகிறதா?