Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்து நடந்ததா? நடத்தப்பட்டதா? ரவுடி விகாஸ் என்கவுண்டர் பின்னணி??

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (10:06 IST)
விபத்தை காரணம் காட்டி தப்பிக்க முயன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 
 
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில் பகுதியில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கைது செய்வதற்காக கடந்த 2-ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றபோது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக விகாஸ் துபே சுட்டதில் 8 போலீசார் பலியாகினர்.
 
உபி முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் அம்மாநில போலீசார் விகாஸ் துபேயை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 
இதனையடுத்து மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து விசாரணைக்காக உபி மாநிலத்திற்கு அழைத்து வரும் வழியில் கார் விபத்துக்குள்ளாகியதகா தெரிகிறது. அப்போது அந்த சமயம் காயமடைந்த போலீஸ் ஒருவர் துப்பாக்கியை எடுத்து மற்ற காவலர்களை சுட்டுள்ளார், தப்பிக்கவும் முயன்றுள்ளார். 
 
எனவே போலீஸார் தற்காப்புக்காக என்கவுண்டர் நடத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால், விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்த் எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே இந்த விபத்து திட்டமிடப்பட்டதா அல்லது தற்செயலாக நேர்ந்ததா என தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments