Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் மீது பாலியல் வன்முறை: 4 பேருக்கு 11 நாட்கள் காவல்- மணிப்பூர் போலீஸார் தகவல்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (21:14 IST)
மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள வன்முறைக்கு எதிராக வரும் ஜூலை 24 ஆம் தேதி காலை,  நாடாளுமன்ற வளாகத்தில், மத்திய அரசைக் கண்டித்து,  I.N.D.I.A  கூட்டணி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை   நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற  வீடியோ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இதற்கு கருத்துகள் கூறி வருகின்றனர்.

இந்த இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தில் முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அந்த குற்றவாளியின் புகைப்படத்தை மணிப்பூர் மாநில போலீஸார் வெளியிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி மணிப்பூர் முதல்வர் , ’’ மணிப்பூர் மக்கள் பெண்களை தாயாக மதிப்பவர்கள்.  இந்தச் சம்பவம் மாநிலத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால்  மாநில தழுவிய கண்டன போராட்டம்   நடத்தவிருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள வன்முறைக்கு எதிராக வரும் ஜூலை 24 ஆம் தேதி காலை,  நாடாளுமன்ற வளாகத்தில், மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 2 கட்சிகள் உள்ள்டக்கிய  I.N.D.I.A  கூட்டணி சார்பில்  போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு 11 நாட்கள் போலீஸார் காவல் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்